16 June 2023
Fond remembrance of our beloved and revered
Fond remembrance of our beloved and revered
Guru Nair Uncle-
The fountain of unconditional love…
16 June
கண்டதால் கூறாதே
கேட்டால் மட்டும் கூறு…
குழந்தையாயினும்
குமாரனாகினும்
அரசனாகினும்
ஆண்டியாகினும்
அறம் மறந்தவனாகினும்
வரம் பெற்றவனாகினும்…
கண்டதால் கூறாதே
கேட்டால் மட்டும் கூறு…
மருந்தில்லா நோயில்லை
பரிஹாரமில்லா தோஷமில்லை
என்ற
அகஸ்திய வாக்கினை
ஆழமாய் அனுசரித்து
புலஸ்திய மஹரிஷியின் பேரனின் மண்ணில் இருந்து
ஆசிர்வாதம் பெற்று
எதிர்பார்ப்பில்லாத அன்பினால் ஆறுதலும் ஆசியும் தந்து
முழுமையாக விளக்கம் சொல்லி
முன்ஜன்ம கர்மவினைகளுக்கு
இஜ்ஜான்மதில். பரிஹாரம் சொல்லி தந்த
தன்னலமற்ற தியாகியாம்
குருவே ! உறவே ! உயிரே !
நீ வாழ்கிறாய்
உன் ஆசி பெற்ற உள்ளங்களில்
வாழையடி வாழையாக
வரும் வம்சங்களில் !
அமரர் நீ !
ஒவ்வொரு நொடியும் உன்னை உணர்ந்து
உலவுகிறேன், உதவுகிறேன்
உன்னை சேரும் நாள் வரை
நீ குறிக்கும் கொள் வரை…