Whispers of a Wanderer

12 September 2024

Fond remembrance

Fond remembrance
Mahakavi Subrahmanya Bharathi…
(11121881- 12091921)

முற்ப்பத்து ஒன்பது ஆண்டுகள்
மட்டுமே உடல்கொண்ட
முண்டாசு கவி மறைந்த நாள்…

முத்தமிழ் கவிதைகள் முற்போக்கு கவிதைகள்

தேசிய கவிதைகள்
தீப்பறக்கும் கவிதைகள்

பாருக்கும் ஓர் கவிதை
பாரளுபனுக்கும் ஓர் கவிதை

பெண்ணுக்கு ஓர் கவிதை
விண்ணுக்கும் ஓர் கவிதை

சிறு பிள்ளைக்கு ஓர் கவிதை
தேச எல்லைக்கும் ஓர் கவிதை

சிக்கியரின் முண்டாசு
வங்காளத்தின் வேஷ்டி
வெள்ளையனின் மேலாடை
தென்னவனின் திலகம்…

காகத்தின் கருமையில் கண்ணனை காண்டவன்
வீரத்தின் வடிவை நிமிர்ந்த நன்னடயில் பெண்ணிடம் கண்டவன்

சுதந்திர தாகத்தை
வறுமையில் காத்தவன்
தனிமனித சோகத்தை
வெய்யகத்தில் சேர்த்தவன்

சாகா வரம் பெற்ற அவன் கவிதை பாடுவது
தமிழுக்கும் அவனுக்கும்
நாம் சேர்க்கும் பெருமை…