Whispers of a Wanderer

15 April 2026

சித்திரை ஒன்று இன்று

சித்திரை ஒன்று இன்று
நித்திரை விட்டு எழு நன்று

கதிரவன் ராசி முதலாம் அதில் சேர
மேஷத்தின் புதுமை
வேஷத்திலும் உண்டாகட்டும்

கணி கண்டு மகிழ்
நாளுணவு உண்டு மகிழ்

கை நீட்டித் தந்து மகிழ்
பெற்று மகிழ்

இயற்கையை தன்னுயிராக நினைத்து அரவணை
இன்னல் இல்லா வையகத்திற்காக வேண்டுதல் வை

அம்மை அப்பனை ஆசானை அகிலமாவனை வணங்கு
ஆவியான முன்னோர்களையும் நினைந்து

நன்கு பயிர் உயிர்க்க
மழை பொழிய
பால் வளம் பெருக
நற்தேன் உண்ண
உழவன் சிரிக்க
உயிர்கள் நிலைக்க

மாற்றங்களை மனதோடு சேர்த்து
மண்ணின் மணத்தை முகர்ந்து
தொட்டு நெற்றியில் இட்டு
வாழ்க்கையில் விபூதி காண
வானளவு வாழ்த்துக்கள்