date unknown
இன்று 'நடிப்பின்' பிறந்த நாள்...
நிஜ வாழ்வில் நடிக்க தெரியாத நடிகர் திலகத்தின் பிறந்த நாள்...
பேசும் கண்கள்
தமிழ் மணம் வீசும் சொற்கள்
கம்பீர குரலோன்
கண்ணிய நடையோன்…
பரமசிவன், பராசக்தி பெற்றோன்
கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன் ,
உயர்ந்த மனிதன், தேவர் மகன்
அன்புள்ள அண்ணன், எங்க மாமா
தெய்வ மகன், நவராத்ரி நாயகன்…
சிறப்பிற்கு சிக்கில் ஷண்முகசுந்தரம்,
சிரிப்புக்கு மோட்டார் சுந்தரம்
உனக்கென வசந்த மாளிகை, கௌரவம், பாசம்
உனக்காக சிவந்த மண், உனக்காக பூத்த பாச மலர்…
அரவணைக்கும் அபிநயம்
வரவழைக்கும் அபிநயம்
ஆறுதல் தரும் அபிநயம்
அதிரவைக்கும் அபிநயம்
காதல் வளர்க்கும் அபிநயம்
கண் நனைக்கும் அபிநயம்...
முதல் மரியாதை என்றும் உனக்கே !
உன்னை சேராத பட்டங்கள் இருக்கலாம்
ஆனால் உன்னை சாராத நடிப்பே இல்லை...
வாழும் உன் புகழ்
வெய்யகம் வாழும் வரை
பிறப்பு வாழ்க்கை இறப்பு எனும் இயற்க்கையின் நாடகம் வாழும் வரை...
To the Legendary Sivaji Ganesan
On his Birth Anniversary
01 October